தளத்தில் தேடுங்கள்

தற்போதைய மொழியில் தேட தட்டச்சு செய்யவும்.

இருத்திய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (ICANN)

இருத்திய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (Internet Corporation for Assigned Names and Numbers)

இருத்திய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (ICANN)

யார் இவர்கள்?

  • இருத்திய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (ICANN) என்பது 1998-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற பொது நன்மை நிறுவனம். நிலையான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய இணையத்தை உறுதிப்படுத்த உதவுவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

ஏன் இவர்கள் தேவை?

  • இணையத்தில் மற்றொரு அமைப்பை (நபர், நிறுவனம், சேவையகம்) தொடர்புகொள்ள, உங்கள் சாதனத்தில் (கணினி/திறன் பேசி) ஒரு முகவரியை (ஒரு பெயர் அல்லது எண்ணை) உள்ளீடு செய்ய வேண்டும். அந்த முகவரி தனிப்பட்டதாக இருக்க வேண்டும்; அப்பொழுது தான் கணினிகள் ஒன்றையொன்று எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க இயலும். உலகெங்கிலும் உள்ள இந்த தனித்துவமான அடையாளங்காட்டிகளை ஒருங்கிணைக்கவும் ஆதரிக்கவும் இந்நிறுவனம் உதவுகிறது.

இந்நிறுவனத்தின் பொறுப்பு என்ன?

  • இணையத்தின் செயல்பாட்டு நிலைத்தன்மையைப் பாதுகாத்தல்; போட்டியை ஊக்குவித்தல்; உலகளாவிய இணைய சமூகங்களின் பரந்த பிரதிநிதித்துவத்தை அடைதல்; மற்றும் கீழிருந்து மேல் செல்லும், கருத்து இணக்கம் அடிப்படையிலான செயல்முறைகள் மூலம் இணையத்தின் பணிக்கு பொருத்தமான கொள்கையை உருவாக்குதல். தொழில்நுட்ப ரீதியாக சொல்வதென்றால், இந்நிறுவனம், இணைய இருத்திய எண்கள் ஆணையத்தின் (IANA) செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.