களப்பெயர் முறைமை ஏடுகள்
களப்பெயர் முறைமை ஏடுகள் / DNS Records
- A ஏடு – இணைய நெறிமுறை பதிப்பு 4 (IPv4) முகவரி சேமிக்குமிடம்
- AAAA ஏடு - இணைய நெறிமுறை பதிப்பு 6 (IPv6) முகவரி சேமிக்குமிடம்
- CNAME ஏடு – மாற்று களப்பெயர் சேமிக்குமிடம், இந்த ஏடு இருந்தால் இ.நெறி முகவரி கொடுக்கப்படாது.
- MX ஏடு – இந்தக் களப்பெயர் நோக்கி வரும் மின்னஞ்சல்களை அதன் மின்னஞ்சல் சேவையகத்திற்கு மடை மாற்றும்
- TXT ஏடு – கள நிர்வாகி சில எழுத்துக் குறிப்புகளைச் சேமிக்குமிடம்
- NS ஏடு – களத்தின் அதிகாரப்பூர்வ களப்பெயர் வழங்கன் முகவரியைச் சேமிக்குமிடம்
- SOA ஏடு – கள நிர்வாகி குறித்த தகவல்களைச் சேமிக்குமிடம்.
- SRV ஏடு – குறிப்பிட்ட சேவைகளுக்கான துறை எண்ணைக் குறிக்குமிடம்
- PTR ஏடு – எதிர்த்திசை வினவலின் போது, களப்பெயரைப் பதிலாகக் கொடுக்கும். இந்த ஏட்டில் இ.நெறி முகவரி தலைகீழாகச் சேமிக்கப்படும்
களப்பெயர் முறைமைப் பாதுகாப்பிற்கான பிரத்யேக ஏடுகள் (DNSSEC Specific Records)
- RRSIG ஏடு – ஏட்டுத் தொகுப்பின் இலக்கமுறைக் குறியொப்பத்தைச் சேமிக்குமிடம்
- DNSKEY ஏடு – மறையாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொதுத் திறவியைச் சேமிக்குமிடம்.
- DS ஏடு – DNSKEY ஏட்டின் குறுக்க மதிப்பைச் சேமிக்குமிடம்
- NSEC மற்றும் NSEC3 ஏடு – குறிப்பிட்ட களப்பெயர் முறைமை ஏடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஏடு
- CDNSKEY மற்றும் CDS ஏடு – ஒரு குழந்தை மண்டலம் தன் பெற்றோர் மண்டலத்தில் உள்ள DS ஏட்டைப் புதுப்பிக்கப் பயன்படுகிறது.