மறையாக்க வகைகள்
மறையாக்கம் கீழ்காணும் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. இவை குறித்து அடுத்து விரிவாக காணலாம்.
1. ஒற்றைத் திறவி மறையாக்கம் (Symmetric Encryption)
மறையாக்கம் (Encryption) மற்றும் மறைநீக்கம் (Decryption) ஆகிய இரண்டுக்கும் ஒரே திறவி பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவிலான தரவுகளைப் பாதுகாப்பதற்கு இது வேகமானதாகவும் திறமையானதாகவும் விளங்குகிறது.
2. இரட்டைத் திறவி மறையாக்கம் (Asymmetric Encryption)
இதில் பொதுத் திறவி (Public key) மற்றும் தனித் திறவி (Private key) என இரண்டு வெவ்வேறு திறவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கும் திறவிப் பகிர்வுக்கும் உதவுகிறது.
3. குறுக்கம் (Hashing)
குறுக்கம் என்பது தரவை நிலையான நீளம் கொண்ட மதிப்பாக மாற்றுகிறது. இது தகவலை மீண்டும் மறைநீக்கம் செய்வதற்காக அல்லாமல், முக்கியமாகத் தகவலின் ஒருமைப்பாட்டை (Integrity) சரிபார்க்கப் பயன்படுகிறது.