மேகக் கணிமை சேவை முறைகள் / Cloud Service Models
1. சேவையாக உள்கட்டமைப்பு / Infrastructure as a Service (IaaS)
மெய்நிகராக்கப்பட்ட கணிமை, பிணையம் அல்லது சேமிப்பகம் போன்ற அடிப்படை கணினி உள்கட்டமைப்பின் நிர்வகித்து மேகக் கணிமை சேவையாளர்கள் வள திரள்விற்கான அணுகலை வழங்குகின்றனர். கக் கணிமை நுகர்வோர் தங்கள் தேவைக்கேற்ப பல்வேறு இயங்குதளம் மற்றும் பயன்பாடுகளை அதன் மேல் நிறுவலாம்.
2. சேவையாக பணித்தளம் / Platform as a service (PaaS)
மேகக் கணிமை சேவையாளர்கள் தரவுத்தளங்கள், பயன்பாட்டு தளங்கள், நிரலாக்கத் தளங்கள், இயக்க நேரச் சூழல் போன்ற தளங்களை உருவிலா நிலையில் பணித்தளமாக வழங்குகின்றனர்
எடுத்துக்காட்டு:
- பைத்தான், PHP அல்லது பிற மூலக்குறியீட்டை இயக்குவதற்கான இடம்
- சேவையாக தரவுத்தளம் (Database as a Service)
- சேவையாக தரவுகிடங்கு (Datawarehousee as a Service)
- சேவையாக சேமிப்பகம் (Data Storage as a Service)
- சேவையாக இயந்திர கற்றல் (Machine Learing as a Service)
முக்கிய வேறுபாடு என்னவென்றால், நீங்கள் அடிப்படையில் உள்ள சேவையகங்கள், பிணையங்கள் அல்லது பிற உள்கட்டமைப்பை நிர்வகிக்க மாட்டீர்கள்.
3. சேவையாக மென்பொருள் / Software as a Service (SaaS)
மேகக் கணிமை சேவையாளர்கள் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும் முழு பயன்பாடு. இணைய உலாவி, மொபைல் பயன்பாடு அல்லது இலகுரக கிளையன் பயன்பாடு மூலம் நுகர்வோர் இதை அணுகலாம்.
தனிப்பயனாக்கம் / உள்ளமைவு கிடைக்கக்கூடும். அம்சங்கள் அல்லது திறன்களை மாற்ற முடியாது.
எடுத்துக்காட்டு:
- நெட்ஃபிக்ஸ்,
- பிரைம் வீடியோ
- ஜிமெயில்
- யூடியூப்
- ஜூம்
- மைக்ரோசாப்ட் 365 போன்ற சேவைகள்