கட்டச்சங்கிலிக்கு ஏற்ற சூழல்

இன்றைய சூழலில், அறிமுகமில்லாத இரு நபர்களோ / நிறுவனங்களோ தங்களிடையே பரிவர்த்தனை செய்ய, பொதுவாக உள்ள மூன்றாம் நபரையோ / நிறுவனத்தையோ நம்புகின்றனர். உதாரணமாக,

  • ஒரு நபரை அடையாளம் காண, அரசு அளித்த அடையாள அட்டை (அரசு) பொதுவாக நம்பப்படுகிறது.
  • வீடு/நிலம் வாங்க / விற்க, அரசு பதிவுத்துறை பொதுவாக நம்பப்படுகிறது
  • வாகனம் வாங்க / விற்க, அரசு வட்டார போக்குவரத்து அலுவலகம் பொதுவாக நம்பப்படுகிறது
  • பணம் அனுப்ப / பெற, ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இங்கே வங்கிகள் பொதுவாக நம்பப்படுகிறது.

இதனால், மூன்றாம் நபரின் மீது சார்பு நிலை ஏற்படுகிறது. இந்த பரிவர்த்தனைகளை பதிவு செய்யும் மூன்றாம் நபர்/நிறுவனம், அந்த தரவுகளை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பரிவர்த்தனைகளை சரிபார்க்க வெளிப்படையான அனுமதி இல்லை.

இந்த சிக்கல்களுக்கான தீர்வாக கட்டச்சங்கிலி அமைந்துள்ளது. இது ஒரு இணையர்-இணையர் பிணையத்தை (P2P Network) அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது.

  • வடிவமைப்பு முறை நம்பிக்கை ஏற்படுத்துகிறது
  • பரவலாக்கப்பட்ட தரவு மற்றும் மேலாண்மை
  • பதிவேட்டின் நகல் அனைத்து நபர்களிடம் இருக்கும்

இது எவ்வாறு நடக்கிறது என்று பின் வரும் பக்கங்களில் காணலாம்.