போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புச் சான்றிதழ் வகைகள்​ / Transport Layer Security Certificate Types​

1. களப்பெயர் சரிபார்த்தல்​ / Domain validation

குறைந்த அளவிலான உறுதி நிலையை அளிக்கிறது. இவ்வகைச் சான்றிதழ்கள் பெற எளிதானவை. வலைத்தளத்தின் களப்பெயர் மட்டுமே சரிபார்க்கப்படும்​. இச்சான்றிதழ்களைக் கொண்ட வலைத்தளங்களில் பாதுகாப்பான பூட்டு சின்னம் மட்டுமே இருக்கும். அந்த வலைத்தளத்தின் உரிமையாளர் பெயரோ அல்லது வணிக நிறுவன பெயரோ இருக்காது. ​எனவே, பாதுகாப்பான அடையாளம் இருந்தபோதிலும், பார்வையாளர்கள் வலைத்தளம் உண்மையில் அவர்கள் தேடும் வணிகத்திற்கு சொந்தமானதா என்பதை சரிபார்க்க எந்த வழியும் இல்லை.


2. நிறுவனம் சரிபார்த்தல் ​/ Organization Validation

இதுவே மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உறுதி நிலை​. இவ்வகைச் சான்றிதழ்கள் கொண்ட வலைத்தளங்கள் பாதுகாப்பான பூட்டு சின்னத்துடன் தங்கள் வணிகப் பெயரை உடன் கொண்டுள்ளன​. இந்த சான்றிதழ்கள் அதிக உத்தரவாதத்தை அளிப்பதால், இவை சான்றிதழ் ஆணையங்களின் சரியான ஆய்வுக்குப் பிறகுதான் வழங்கப்படுகின்றன​. இவ்வகைச் சான்றிதழ்கள் முக்கியமான வாடிக்கையாளர் தரவைக் கையாளும் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.


3. விரிவாக்கப்பட்ட சரிபார்த்தல் ​/ Extended Validation

இவ்வகைச் சான்றிதழ்கள் மிக உயர்ந்த பாதுகாப்பு உறுதி நிலை வழங்குகின்றன மேலும் இவற்றைப் பெறுவது கடினம். விரிவாக்கப்பட்ட சரிபார்த்தல் சான்றிதழைப் பெற விரும்பும் நிறுவனம் சான்றிதழ் ஆணையத்தால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும். இதில் வணிகத்தின் இயல்பான இருப்பிடம், துறை போன்றவற்றை சரிபார்க்கிறது.​ இவ்வகைச் சான்றிதழ் கொண்ட வலைத்தளங்கள் அவற்றின் நிறுவன பெயர், நாட்டின் குறியீடு மற்றும் பாதுகாப்பான பூட்டு சின்னம் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும். ​

4. ஒற்றை களப்பெயர் சான்றிதழ்கள் (Single Domain Certificates)​

சான்றிதழில் குறிப்பிடப்பட்ட ஒற்றை களப்பெயரை பாதுகாக்கிறது​. இவ்வகைச் சான்றிதழ் களப்பெயர் (Domain Name) மற்றும் உள்களப்பெயர்களுக்கும் (Sub Domain Name) வழங்கப்படும். எ.கா. www.google.com, mail.google.com​


5. பல களப்பெயர் சான்றிதழ்கள் (Multi-Domain Certificates) ​

இவ்வகைச் சான்றிதழ்கள் பொருள் மாற்று பெயர் சான்றிதழ்கள் (Subject Alternative Name Certificates) / ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு சான்றிதழ்கள் (Unified Communications Certificates) என்றும் அறியப்படுகிறது​. சில சேவையக சூழல்கள் பல சான்றிதழ்களை நிறுவ அனுமதிக்காது, இந்த சிக்கலை தீர்க்க இவ்வகைச் சான்றிதழ்கள் எளிதான மற்றும் செலவு குறைந்த தீர்வாகும்​. இவ்வகைச் சான்றிதழ்கள் அனைத்து சரிபார்த்தல் முறையிலும் வழங்கப்படும்​. 250 மாற்று களப்பெயர்கள் வரை ஒரு சான்றிதழில் இணைக்க முடியும்.​ இந்த சான்றிதழ்கள் செயல்படுவதற்கு முன்பு அனைத்து மாற்று பெயர்களுக்கும் களப்பெயர் சரிபார்த்தல் வெற்றிகரமாக முடிந்திருக்க வேண்டும்.​


6. வரம்பிலா களப்பெயர் சான்றிதழ்கள் (Wildcard Certificates)​

ஒரே களப்பெயரில் முடியும் பல உள்களங்களை கொண்டுள்ள வணிக நிறுவனங்கள் மத்தியில் இவ்வகைச் சான்றிதழ்கள் மிகவும் பிரபலம். உருவாக்கத்தின் போது நட்சத்திர குறியை () பயன்படுத்தி, நிறுவனத்தின் பொதுவான பெயரை “.domain.com” என்ற வடிவில் குறித்து வழங்கப்படும்.​ “*” என்பது ஒரு வரம்பிலா தன்மையைக் குறிக்கும் சின்னம். இந்த சின்னம் “domain.com” என்ற களப்பெயர் கொண்டு முடியும் அனைத்து உள்களங்களையும் குறிக்கும். இதனால் அனைத்து உள்களங்களையும் பாதுகாக்கிறது​. இவ்வகைச் சான்றிதழ்கள் நிறுவனம் சரிபார்த்தல் மற்றும் விரிவாக்கப்பட்ட சரிபார்த்தல் முறையில் மட்டுமே வழங்கப்படும்​


7. வரம்பிலா பல களப்பெயர் சான்றிதழ்கள் (Wildcard Multi-Domain Certificates) ​

இவ்வகைச் சான்றிதழ்கள் சிக்கலான வலை-உள்கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.​ இந்த சான்றிதழ்கள் விற்பனையாளரைப் பொறுத்து ஒரு சான்றிதழில் 250 களங்கள் வரை பாதுகாக்கும்.​ பொதுவான பெயர் முழு தகுதி வாய்ந்த களப்பெயராக இருக்க வேண்டும் (www.domain.com)​. உங்கள் மாற்று களப்பெயர்களின் பட்டியல் முழு தகுதி வாய்ந்த களப்பெயராக (www1.domain.com), வரம்பிலா களப்பெயர் (*.domain.com) அல்லது இரண்டின் கலவையாகவும் இருக்கலாம்​.