பொதுத் திறவி உள்கட்டமைப்பின் கூறுகள் (PKI components)

  • பதிவு ஆணையம் (Registration Authority)​

    • சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அடையாளத்தை சரிபார்க்கும் சேவையை செய்கிறது.​
  • சான்றிதழ் ஆணையம் (Certificate Authority)​

    • இலக்கமுறைச் சான்றிதழ்களை வழங்கி, சேமித்து, மற்றும் குறியொப்பமிடும் சேவைகளை செய்கிறது.​
  • மைய களஞ்சியம் / கோப்பகம் (Central Repository)​

    • திறவிகள் சேமிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்படும் பாதுகாப்பான இடம்;​
  • சான்றிதழ் மேலாண்மை அமைப்பு (Certificate Management System)​

    • சேமிக்கப்பட்ட சான்றிதழ்களுக்கான அணுகல் மற்றும் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்களை வழங்குவது, சான்றிதழ் வாழ்நிலைச் சுழற்சி (Certificate Lifecycle) போன்றவற்றை நிர்வகிக்கும்
  • சான்றிதழ் கொள்கை (Certificate Policy)​

    • பொதுத் திறவி உள்கட்டமைப்பின் நடைமுறைகள் தொடர்பான தேவைகளை குறிப்பிடும். பொதுத் திறவி உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மூன்றாம் தரப்பினர் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது.​
  • சரிபார்த்தல் ஆணையம் (Validation Authority)​

    • தவறான சான்றிதழ்களின் பட்டியலைக் குறிப்பிடுவதன் மூலம் இலக்கமுறைச் சான்றிதழின் செல்லுபடியை சரிபார்க்கும் ஒரு அமைப்பாகும். இது இலக்கமுறைச் சான்றிதழ் நம்பகமான சான்றிதழ் ஆணையத்தால் வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துகிறது.​