பொதுத் திறவி உள்கட்டமைப்பு அறிமுகம்
பொதுத் திறவி உள்கட்டமைப்பு என்பது வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), கொள்கைகள் (Policies) நடைமுறைகள் (procedures), மக்கள் (People), பாத்திரங்கள் (Roles) ஆகியவற்றின் தொகுப்பாகும்.
இந்த தொகுப்பு இலக்கமுறைச் சான்றிதழ்களை (Digital Certificates) உருவாக்க, நிர்வகிக்க, விநியோகிக்க, பயன்படுத்த, சேமிக்க, சரிபார்க்க, திரும்பப்பெற மற்றும் சான்றிதழ் வாழ்நிலைச் சுழற்சியை (Certificate Lifecycle) நிர்வகிக்க பயன்படுகிறது.
இது தகவல் பரிமாற்றம் செய்யும் தரப்பினரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், அனுப்பப்படும் தகவல்களை சரிபார்க்கவும் பாதுகாப்பான உள்கட்டமைப்பை வழங்குகிறது.
பொதுத் திறவி உள்கட்டமைப்பின் நோக்கம் இணைய பரிவர்த்தனைகள், இணைய வங்கி மற்றும் மின்னஞ்சல் போன்ற மின்னணு பரிமாற்றத் தகவலின் பாதுகாப்பை எளிதாக்குவதாகும்
எளிமையான கடவுச்சொல் வழி சான்றுறுதி (Authentication) மட்டுமே போதாத நிலையில், கடுமையான சான்றுறுதி தேவைப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்பினரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், பரிமாற்றப்படும் தகவல்களை சரிபார்க்கவும் இது பயன்படுகிறது.
பொதுத் திறவி உள்கட்டமைப்பு இலக்கமுறைச் சான்றிதழ்களை உருவாக்குகிறது, இது ஒரு குறிப்பிட்ட பொதுத் திறவியை ஒரு குறிப்பிட்ட நபர்/நிறுவனத்துடன் இணைக்கிறது, இந்த சான்றிதழ்களை ஒரு மைய களஞ்சியத்தில் பாதுகாப்பாக சேமித்து, ஒரு குறிப்பிட்ட நபர்/நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை சரிபார்க்கப் பயன்படுகிறது