இலக்கமுறைக் குறியொப்ப சான்றிதழ் வகைகள் / Digital Signature Certificate Types
சான்றிதழ் வகை | உத்தரவாத நிலை | பொருந்தக்கூடிய சூழல் |
---|---|---|
வகுப்பு 1 சான்றிதழ் (Class 1 Certificate) |
வணிக நிறுவன நபர்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்துவதற்கு வழங்கப்படும். சந்தாதாரர் வழங்கிய விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள், நன்கு அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் தரவுத்தளங்களில் உள்ள தகவலுடன் முரண்படவில்லை என்பதை இந்த சான்றிதழ்கள் உறுதிப்படுத்தும். |
தரவு கசிவு மறையிடர் மற்றும் விளைவுகள் குறைவாக இருக்கும் சூழல்களுக்கு ஒரு அடிப்படை நிலை உத்தரவாதத்தை வழங்குகிறது. அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படவில்லை. |
வகுப்பு 2 சான்றிதழ் (Class 2 Certificate) |
வணிக நிறுவன நபர்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்துவதற்கு வழங்கப்படும். சந்தாதாரர் வழங்கிய விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள், நன்கு அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் தரவுத்தளங்களில் உள்ள தகவலுடன் முரண்படவில்லை என்பதை இந்த சான்றிதழ்கள் உறுதிப்படுத்தும். |
தரவு கசிவு மறையிடர் மற்றும் விளைவுகள் மிதமாக இருக்கும் சூழல்களுக்கு உத்தரவாதத்தை வழங்குகிறது. இது கணிசமான பண மதிப்பு அல்லது மோசடி மறையிடர்கள் கொண்ட பரிவர்த்தனைகள் தீங்கிழைக்கும் அணுகல் வழியாக தனியார் தகவல்களை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக இருக்கும் நிலைகளை உள்ளடக்கியது. |
வகுப்பு 3 சான்றிதழ் (Class 3 Certificate) |
வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்துவதற்கு வழங்கப்படும். இவை உயர் உத்தரவாத சான்றிதழ்கள் என்பதால், முதன்மையாக இணைய வர்த்தக பயன்பாடுகளுக்காக வழங்கப்படுகிறது. சான்றளிக்கும் அதிகாரிகளின் முன் நேரில் சென்று விண்ணப்பித்தால் மட்டுமே இவ்வகை வழங்கப்படும். |
தரவுக்கு அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும் அல்லது பாதுகாப்பு சேவைகளின் தோல்வியின் விளைவுகள் அதிகமாக இருக்கும் சூழல்களுக்கு இந்த நிலை பொருத்தமானது. இதில் மிக உயர்ந்த மதிப்பு பரிவர்த்தனைகள் அல்லது அதிக அளவு மோசடி மறையிடர்கள் இருக்கலாம். |
இலக்கமுறைக் குறியொப்பம் (ஒப்பமிடல் / சரிபார்த்தல்) / Digital Signature (Signing / Verification)
சான்றிதழ் அடிப்படையிலான சான்றுறுதி / Certificate Based Authentication
சான்றிதழ் அடிப்படையிலான சான்றுறுதி என்பது ஒரு பயனர், இயந்திரம் அல்லது சாதனத்தை அடையாளம் காண இலக்கமுறைச் சான்றிதழைப் பயன்படுத்துவதாகும்.
எந்த ஒரு வளம் (Resource), பிணையம் (Network) அல்லது பயன்பாடு / செயலி (Application) போன்றவற்றுக்கான அனுமதி வழங்குவதற்கு முன் சான்றுறுதி செய்யப்படுகிறது.
மனித அடையாளத்தை பொறுத்தவரை, இது மற்ற சான்றுறுதி முறைகளான கடவுச்சொல் (Passwords), உயிரளவை (Biometrics) மற்றும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP) போன்றவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.
இச்சான்றுறுதி முறையின் தனித்துவம் என்னவென்றால், மனித பயனர்களுக்கு மட்டுமே வேலை செய்யும் சில தீர்வுகளைப் போலல்லாமல், அனைத்து வகை பயனர்களுக்கும் ஒரே சான்றுறுதி தீர்வாக இம்முறையை பயன்படுத்தப்படலாம்.
சான்றிதழ் அடிப்படையிலான சான்றுறுதி நான்கு கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் அமையும். இவற்றில் ஒரு கேள்விக்கு தோல்வியான பதில் கிடைக்கப் பெற்றாலும், சான்றுறுதி தோல்வியுற்று அனுமதி மறுக்கப்படும்.
- சான்றிதழ் நம்பகமான சான்றிதழ் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளதா?
- இடைநிலை மற்றும் வேர் சான்றிதழ் ஆணையம் நம்பப்படுகிறதா?
- இடைநிலை மற்றும் வேர் சான்றிதழ் ஆணையம் நம்பப்படுகிறதா?
- சான்றிதழ் காலாவதி நிலை என்ன?
- சான்றிதழ் வழங்கிய மற்றும் காலாவதி தேதி என்ன?
- சான்றிதழ் வழங்கிய மற்றும் காலாவதி தேதி என்ன?
- சான்றிதழ் திரும்பப்பெற பட்டதா?
- இந்த சான்றிதழ் எந்த காரணத்திற்காகவும் திரும்பப்பெற பட்டதா?
- இந்த சான்றிதழ் எந்த காரணத்திற்காகவும் திரும்பப்பெற பட்டதா?
- பயனர் சான்றிதழ் உடைமைக்கான ஆதாரத்தை வழங்கியதா?
- இந்த சான்றிதழுடன் தொடர்புடைய தனித் திறவி பயனர் தன்வசம் உள்ளதை நிரூபித்ததா?
திறன் அட்டை உள்நுழைவு & சான்றுறுதி / Smart Card Logon & Authentication
- திறன் அட்டை உள்நுழைவு என்பது சான்றிதழ் அடிப்படையிலான சான்றுறுதியின் ஒரு வகை.
- திறன் அட்டை என்பது திரை மற்றும் விசைப்பலகை அற்ற ஒரு சிறிய கணினி. இது ஒரு நுண்செயலி (Microprocessor), சில நினைவகம் மற்றும் சில பயன்பாடுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது.
- அட்டைக்குள்ளேயே மறையாக்கம், மறைநீக்கம், ஒப்பமிடல் மற்றும் செய்திச் சுருக்கும் / குறுக்க மதிப்பு, துணைத் திறவிகள் உருவாக்கம் போன்ற மறைப்பியல் செயல்பாடுகளைச் (Crypto Processing) செய்ய வல்லது
- இவை ISO/IEC 7810 ID-1, 7816 & 14443 தரநிலைகளுடன் இணங்கும் ஒருங்கிணைந்த மின்சுற்று (Integrated Circuit) கொண்ட ஒரு அட்டை
- இவை தனித் திறவிகள், இலக்கமுறைச் சான்றிதழ்கள், கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது தனிப்பட்ட தகவல் போன்ற அதிக மதிப்புமிக்க தகவலைச் சேமிக்க பாதுகாப்பான இடமாகும்
- தனித் திறவி எப்போதும் பாதுகாப்பான வகையில் திறன் அட்டையில் இருக்கும்.
- பொதுத் திறவியும், இலக்கமுறைச் சான்றிதழும் மட்டுமே பகிர அனுமதிக்கப்படும்.
திறன் அட்டை சான்றுறுதி பயன்பாடுகள் / Smart Card Logon Usecases
- தேசிய அடையாளம்
- தேசிய அடையாள அட்டை
- மின்னணு கடவுச்சீட்டு
- ஓட்டுனர் உரிமம்
- மருத்துவக் காப்பீடு அட்டை
- இலக்கமுறைக் குறியொப்பம்
Image Credit: https://medium.com/gupta-siddhant/
- நிறுவனம் / பல்கலைக்கழகம் அடையாள அட்டை
- பாதுகாப்பான பயனர் உள்நுழைவு மற்றும் சான்றுறுதி (கணினி, பிணையம், செயலி, மின்னஞ்சல்)
- இலக்கமுறைச் சான்றிதழ்கள், அறிமுகச்சான்று மற்றும் கடவுச்சொல் சேமித்தல்
- முக்கிய தரவுகள் மறையாக்கம்
- உயிரளவை (Biometrics) சேமித்தல்.
- கட்டிடம், அறைகள் மற்றும் வாகன நிறுத்தம் அனுமதி
- வருகைப்பதிவு (Attendance), நேரப்பதிவு (Time Logging)
- வர்த்தக பயன்பாடுகள்
- வங்கி (பற்று / கடன் அட்டைகள்) மற்றும் செலுத்தம் சேவைகள்
- பாதுகாப்பான வணிகம்-வணிகம் (B2B) மற்றும் வணிகம்-வாடிக்கையாளர் (B2C) இணைய வர்த்தகம் பரிவர்த்தனைகள்
- வாடிக்கையாளர் விசுவாசம் மற்றும் தள்ளுபடி சேவைகள்
- பயணச்சீட்டு / நுழைவுச்சீட்டு விற்பனை
- வாகன நிறுத்த கட்டணம் மற்றும் சுங்கவரி வசூல்
- பாதுகாப்பான கைபேசி சந்தாதாரர் அடையாள தொகுதி மற்றும் சான்றுறுதி