நம்பிக்கை சங்கிலி / Chain of Trust

நம்பிக்கையின் சங்கிலி பல பகுதிகளைக் கொண்டுள்ளது.

முதலில் ஒரு நம்பிக்கை நங்கூரம் (Trust Anchor). இது வேர் சான்றிதழ் ஆணையம் (Root Certifying Authority) என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டாவதாக, ஒரு இடைநிலை சான்றிதழ் ஆணையம் (Intermediate CA). இதன் கட்டுப்பாட்டில் பல துணை இடைநிலை சான்றிதழ் ஆணையங்கள் (Sub CA) இருக்கலாம்.

இந்த இடைநிலை சான்றிதழ் ஆணையம் இறுதி அமைப்புகள் மற்றும் வேர் சான்றிதழ் ஆணையத்தின் இடையே ஒரு அரண் போல் செயல்படுகிறது.

இறுதியில் ஒரு வலைத்தளம், நிறுவனம் அல்லது நபர் போன்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் இறுதி அமைப்புச் சான்றிதழ் (End Entity Certificate)

நம்பிக்கை சங்கிலி சரிபார்த்தல் / Chain of Trust Verification

அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய ஒரு வாடிக்கையாளர் தனது சான்றிதழை வழங்குகிறார். இந்த சான்றிதழில் பொதுவாக வேர் சான்றிதழ் ஆணையம் வரை உள்ள சான்றிதழ்களின் சங்கிலியுடன் இருக்கும். சரிபார்ப்பவர் சான்றிதழை எடுத்து வழங்கியவரின் பொதுத் திறவியைப் பயன்படுத்தி சரிபார்க்கிறார். வழங்குநரின் பொதுத் திறவி வழங்குநரின் சான்றிதழில் காணப்படுகிறது, இது வாடிக்கையாளரின் சான்றிதழுக்கு அடுத்த சங்கிலியில் உள்ளது. இப்போது வழங்குபவரின் சான்றிதழில் கையெழுத்திட்ட உயர் சான்றிதழ் ஆணையத்தை சரிபார்ப்பவர் நம்பினால், சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இந்த அளவில் சரிபார்ப்பு நிறுத்தப்படும். இல்லையெனில், வழங்குநரின் சான்றிதழ் மேலே உள்ள படிகளில் வாடிக்கையாளருக்குச் செய்யப்பட்டதைப் போலவே சரிபார்க்கப்படுகிறது. நம்பகமான சான்றிதழ் ஆணையம் இடையில் காணப்படும் வரை இந்த செயல்முறை தொடர்கிறது, இல்லையெனில் அது வேர் சான்றிதழ் ஆணையம் வரை தொடரும்.