இருத்திய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (Internet Corporation for Assigned Names and Numbers)
யார் இவர்கள்?
- இருத்திய பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம் (ICANN) என்பது 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற பொது நன்மை நிறுவனம். நிலையான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய இணையத்தை உறுதிப்படுத்த உதவுவதே இந்நிறுவனத்தின் நோக்கம்.
ஏன் இவர்கள் தேவை?
- இணையத்தில் மற்றொரு அமைப்பை (நபர், நிறுவனம், சேவையகம்) தொடர்புகொள்ள, உங்கள் சாதனத்தில் (கணினி/திறன் பேசி) ஒரு முகவரியை (ஒரு பெயர் அல்லது எண்ணை) உள்ளீடு செய்ய வேண்டும். அந்த முகவரி தனிப்பட்டதாக இருக்க வேண்டும்; அப்பொழுது தான் கணினிகள் ஒன்றையொன்று எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க இயலும். உலகெங்கிலும் உள்ள இந்த தனித்துவமான அடையாளங்காட்டிகளை ஒருங்கிணைக்கவும் ஆதரிக்கவும் இந்நிறுவனம் உதவுகிறது.
இந்நிறுவனத்தின் பொறுப்பு என்ன?
- இணையத்தின் செயல்பாட்டு நிலைத்தன்மையைப் பாதுகாத்தல்; போட்டியை ஊக்குவித்தல்; உலகளாவிய இணைய சமூகங்களின் பரந்த பிரதிநிதித்துவத்தை அடைதல்; மற்றும் கீழிருந்து மேல் செல்லும், கருத்து இணக்கம் அடிப்படையிலான செயல்முறைகள் மூலம் இணையத்தின் பணிக்கு பொருத்தமான கொள்கையை உருவாக்குதல். தொழில்நுட்ப ரீதியாக சொல்வதென்றால், இந்நிறுவனம், இணைய இருத்திய எண்கள் ஆணையத்தின் (IANA) செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.