வணிக/நுகர்வோர் அடையாள அமைப்பு ஒப்பீடு (IAM vs CIAM comparison)

வணிக அடையாள அமைப்பு நுகர்வோர் அடையாள அமைப்பு
இன்றைய நிறுவனங்களில் காணப்படும் ஆயிரக்கணக்கான அடையாளங்களைக் கையாள வடிவமைக்கப்பட்டுள்ளன.
சான்றுறுதி மற்றும் அங்கீகார கோரிக்கைகளில் ஏற்படும் திடீர் ஏற்றங்களை கையாளும் திறன் குறைவாக உள்ளது.
வணிகம்-வணிகம் அமைப்பிற்கு ஏற்றது.
ஒரு பயனருக்கு ஒற்றை அடையாளம் மட்டுமே இருக்கும்.
ஊழியர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்களுக்காக நிறுவனத்தால் அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன.
வணிக பயன்பாடுகளுக்கான கடுமையான பாதுகாப்புக் கொள்கைகளுடன் சான்றுறுதி மற்றும் அங்கீகாரத்திற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அல்லது நுகர்வோருக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சான்றுறுதி மற்றும் அங்கீகார கோரிக்கைகளில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்களைக் கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
வணிகம்-நுகர்வோர் அமைப்பிற்கு ஏற்றது.
நுகர்வோர் பல அடையாளங்களைக் கொண்டிருக்கலாம்.
அடையாளங்கள் சுயமாக பதிவு செய்யப்படுகின்றன மற்றும் வாடிக்கையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
இறுதி பயனர் எங்கே இருந்தாலும் அல்லது அவர்கள் என்ன சாதனத்தைப் பயன்படுத்தினாலும் ஒரு நிலையான உள்நுழைவு அனுபவத்தை வழங்குகிறது.
சமூக ஊடக வழி சான்றுறுதியை ஆதரிக்கிறது.
இசைவு மேலாண்மையை செயல்படுத்துகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட பயனர் அனுபவத்தை உருவாக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது