ஒற்றை நுழைவு / கூட்டமைத்தல் (SSO/Federation)
கூட்டமைத்தல் (வெவ்வேறு களங்கள்)
கூட்டமைப்பு என்பது இரு அமைப்புகளுக்கு / நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் நம்பிக்கை உறவு. பயனரின் நம்பிக்கைச்சான்று (User Credentials) எங்கே சேமிக்கப்படுகின்றன மேலும், மூன்றாம் தரப்பினர் அதனை பார்க்காமல் அந்த நம்பிக்கைச்சான்றுகளுக்கு எவ்வாறு சான்றுறுதி அளிப்பது என்பதைப் பற்றியது
ஒற்றை நுழைவு (ஒரே களத்தில் உள்ள பல பயன்பாடுகள்)
அடையாள வழங்குநர் பக்கத்தில் ஒருமுறை மட்டுமே உள்நுழைந்து, ஒரு அமர்வைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரே களத்தில் உள்ள வெவ்வேறு பயன்பாடுகளை அங்கீகரிக்கவும் உள்நுழையவும் ஒற்றை உள்நுழைவு பயன்படுத்தப்படுகிறது. ஒற்றை வெளியேற்றம் செய்யவும் இது பயன்படுகிறது