பாதுகாப்பு வலியுறுத்தல் மீவுரை (Security Assertion Markup Language/SAML)

பாதுகாப்பு வலியுறுத்தல் மீவுரை (SAML) என்பது XML-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒற்றை நுழைவு நெறிமுறையாகும் (SSO Protocol). அடையாள வழங்குநர் (IDP) மற்றும் சேவை வழங்குநர் (SP) இடையே SOAP/HTTP கோரிக்கை மீது சான்றுறுதி மற்றும் அதிகாரம் வழங்குதல் என இரண்டையும் ஆதரிக்கும் திறன் பெற்றது. அடையாள சரிபார்ப்புக்காக பேசுவதற்கு முன், இரண்டு வழங்குநர்களும் ஒரு SAML ஒப்பந்தத்தை வரையறுத்து மீத்தரவு வழியாக பூர்வாங்க தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த தகவலில் இது போன்ற விவரங்கள் அடங்கும்:

  • பொதுத் திறவிகள் (மறையாக்கத்திற்கு பயன்படுத்தப்படும்), ஆதரிக்கப்படும் மறையாக்க நெறிமுறைகள், முடிவுபுள்ளி சீர் வள குறிப்பான் (Endpoint URL) (SAML செய்திகளை * எங்கு அனுப்புவது).
  • ஆதரிக்கப்படும் இணைப்பு முறைகள் மற்றும் ஆதரிக்கப்படும் XML பண்பு வடிவங்கள். இரு வழங்குநர்களும் ஒருவரையொருவர் பற்றிய இந்த விவரங்களை அறிந்தவுடன், அதற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்.