அதிகாரம் வழங்கல் வகைகள் / Provisioning Types
விருப்புரிமை அதிகாரம் வழங்கல் / Discretionary access provisioning
* பெரும்பாலும் சிறிய முதல் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், இந்த அணுகுமுறை எந்த பயன்பாடுகள் மற்றும் தரவுகளை பயனர்கள் அணுக முடியும் என்பதை முடிவு செய்ய ஒரு பிணைய நிர்வாகியை அனுமதிக்கிறது..
சுயசேவை அதிகாரம் வழங்கல் / Self-service access provisioning
* பொதுவாக, இந்த அணுகுமுறை ஒரு நிர்வாகியின் பணிச்சுமையை குறைக்க உதவுகிறது. இது பயனர்கள் ஒரு கணக்கைகோருதல் மற்றும் சுய-மேலாண்மை கடவுச்சொற்களை கோருதல் போன்ற வழங்கல் செயல்முறையின் சில அம்சங்களில் பங்கேற்க உதவுகிறது.
பணிப்பாய்வு அடிப்படையிலான கணக்கு வழங்குதல் / Workflow based account provisioning
* ஒரு பயன்பாடு அல்லது தரவுக்கான பயனர் அணுக அதிகாரம் வழங்குவதற்கு முன், நியமிக்கப்பட்ட ஒப்புதல் அளிப்பவர்களிடமிருந்து ஒப்புதல் தேவை. உதாரணமாக, நிதி மேலாண்மை அமைப்பை அணுக அதிகாரம் வழங்குவதற்கு முன், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஒப்புதல் தேவைப்படும்.
தானியங்கு கணக்கு வழங்குதல் / Automated account provisioning
* ஒவ்வொரு கணக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட மேலாண்மை பயன்பாட்டு இடைமுகம் மூலம் ஒரே முறையில் சேர்க்கப்படுகிறது.
* இது பயனர் நம்பிக்கைச்சான்றுகளைச் சேர்ப்பது மற்றும் நிர்வகிப்பது போன்ற செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் குறிப்பிட்ட பயன்பாடுகள் மற்றும் தரவு ஆதாரங்களை யார் அணுகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க நிர்வாகிகளுக்கு மிகவும் துல்லியமான வழியை வழங்குகிறது.
* வழங்கல் மற்றும் அடையாள மேலாண்மை செயல்முறைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பல்வேறு பயனர்களிடையே (எ.கா. நோயாளிகள், மருத்துவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்கள்) வழங்கல் அளவு மற்றும் வகை பெரிதும் வேறுபடுகிறது