கடவுச்சொல்லற்ற சான்றுறுதி (Password-less authentication)
கடவுச்சொல்லற்ற சான்றுறுதி என்பது பல காரணி சான்றுறுதியின் ஒரு வகை ஆகும். இங்கே பலவீனமான கடவுச்சொற்கள் காரணிக்கு மாற்றாக கைரேகை அல்லது இரகசியக் குறியீடு போன்ற மிகவும் பாதுகாப்பான சான்றுறுதி காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. கடவுச்சொல்லற்ற சான்றுறுதி இலக்கமுறைச் சான்றிதழ்கள் சான்றுறுதியின் கொள்கைகளான மறைப்பியல் துணைத்திறவிகளை நம்பியுள்ளது. (தனித்திறவி மற்றும் பொதுத்திறவி)
ஒரு பாதுகாப்பான கணக்கை உருவாக்க விரும்பும் ஒரு தனிநபர் ஒரு தனித்திறவி மற்றும் பொதுத்திறவி அடங்கிய துணைத்திறவிகளை உருவாக்க ஒரு கருவியை (எ. கா. திறன்பேசி செயலி, உலாவி நீட்டிப்பு) பயன்படுத்துகிறார். தனித்திறவி பயனரின் சாதனத்தின் உள்ளேயே சேமிக்கப்பட்டு மற்றும் கைரேகை, பின் அல்லது குரல் அறிதல் போன்ற காரணியுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சைகைகளை செய்வதன்மூலம் மட்டுமே அதை அணுக முடியும்.
பயனர் கணக்கு வைத்திருக்க விரும்பும் இணையதளம், பயன்பாடு, உலாவி அல்லது பிற நிகழ்நிலைச் சேவைகளுக்கு பொதுத்திறவி வழங்கப்படுகிறது.
பொதுத் திறவி உள்கட்டமைப்பு அட்டை(PKI Card)
பொதுத் திறவி உள்கட்டமைப்பு என்பது வலைத்தளம் மற்றும் பயனர்கள் இடையே உள்ள தகவல் தொடர்புகளைப் பாதுகாக்கும் மறையாக்கம் மற்றும் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பாகும்.
Fast Identity Online (FIDO)
Fast Identity Online (FIDO) சான்றுறுதி என்பது பல பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்காக பல நிறுவனங்கள் குழுவாக சேர்ந்து செய்த முன்முயற்சியாகும்.
Yubikey
பாதுகாப்புத் திறவி என்பது விரலி போல் தோற்றமுடைய ஒரு சிறிய வன் சாதனமாகும். மேலும் இதை ஆதரிக்கும் தளங்களில் உங்கள் கடவுச்சொல்லுடன் கூடுதல் காரணியாக பயன்படுகிறது.