ஓரு முறை கடவுச்சொல் / One time password (OTP)
குறுக்க தீர்வுநெறிகள் ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தீர்வுநெறிகள் இரண்டு உள்ளீடுகளைப் பயன்படுத்துகின்றன: விதை மற்றும் நகரும் காரணி.
விதை என்பது ஒரு நிலையான மதிப்பு (இரகசியத் திறவி). இந்த இரகசியத் திறவி நீங்கள் சான்றுறுதி சேவையகத்தில் புதிய கணக்கை நிறுவும் போது உருவாக்கப்படும். நகரும் காரணியின் அடிப்படையில், HOTP & TOTP என இரண்டு வகையான ஒரு முறை கடவுச்சொற்கள் கிடைக்கின்றன.
HOTP
Hash-based Message Authentication Code OTP (HOTP) எனும் குறுக்கம் சார்ந்த செய்தி நம்பத்தகுமைக் குறியீட்டு ஒரு முறை கடவுச்சொல்லை குறிக்கிறது.
HOTP தீர்வுநெறி ஒரு நிகழ்வை அடிப்படையாக கொண்டது. ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்க நகரும் காரணியாக ஒரு எண்ணியை (counter) பயன்படுத்துகிறது. இங்கே நிகழ்வு என்பது எண்ணியின் இலக்க நகர்வாகும்.
அடுத்த ஒரு முறை கடவுச்சொல்லை நீங்கள் உருவாக்கும் வரை முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு முறை கடவுச்சொல் செல்லுபடியாகும்.
TOTP
(TOTP) என்பது time-based OTP எனும் நேரம் சார்ந்த ஒரு முறை கடவுச்சொல்லை குறிக்கிறது.
TOTP தீர்வுநெறி நகரும் காரணியாக எண்ணிக்கு பதிலாக நேரத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொரு கடவுச்சொல்லும் செல்லுபடியாகும் நேரத்தின் அளவு காலஅளவு (timestep) என்று அழைக்கப்படுகிறது.