அடையாள வகைகள் / Identity Types
அடையாளங்களை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
- வணிகம்-வணிகம் அடையாளங்கள்
- வணிகம்-நுகர்வோர் அடையாளங்கள்
வணிகம்-வணிகம் அடையாளங்கள் (B2B / Workforce Identity)
ஒரு வணிக நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு தேவையான அடையாளங்கள் இந்த வகையின் கீழ் வரும். இவை சொந்த செயல்பாட்டிற்கோ அல்லது மற்ற நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய உதவும் அடையாளங்கள். உதாரணமாக,
- பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் (Employees/Contractors)
- நிரல்கள் மற்றும் பயன்பாடுகள் (Applications/Programs)
- பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் / சேவைகள் (API/Services)
- மேசைக்கணினிகள், மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள், வருடுபொறிகள் (Desktop/Laptop)
- சேவையகம் & பிணைய சாதனங்கள் (Servers & Network Devices)
அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை அமைப்பில் நிர்வகிக்கப்படுகிறது.
வணிகம்-நுகர்வோர் அடையாளங்கள் (B2C / Consumer or Customer Idenity)
ஒரு வணிக நிறுவனத்தின் தங்கள் நுகர்வோருக்கு சேவை வழங்க தேவையான அடையாளங்கள் இந்த வகையின் கீழ் வரும். உதாரணமாக,
- நுகர்வோர் & வாடிக்கையாளர்
- திறன் மகிழுந்து (Smart Car)
- திறன் கடிகாரம் (Smart Watch)
- மெய்நிகர் நிலவுகை தலையணி ஒலி/ஒளி வாங்கி (VR/AR Headset)
நுகர்வோர் அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை அமைப்பில் நிர்வகிக்கப்படுகிறது.