அடையாள வரைவுகள் மற்றும் அனாதை கணக்குகள் / Identity mapping & orphan accounts
- அடையாள வரைபடமானது பல்வேறு வடிவங்களில் பயன்பாடுகளில் உள்ள பல்வேறு கணக்குகளை மனிதவள அல்லது செயற்பாட்டு அடைவில் உள்ள ஒரு அதிகாரபூர்வ அடையாளத்துடன் இணைக்கும் ஒரு செயல் ஆகும்
- அனாதை கணக்குகள் என்பது எந்தவொரு அதிகாரபூர்வமான அடையாளத்துடன் இணைக்கப்படாமல் பயன்பாடுகளில் உள்ள கணக்குகள்/அடையாளங்கள் ஆகும்.
- அனாதை கணக்குகள் இரண்டு வகையான பாதுகாப்பு மறையிடர்களுக்கு வழிவகுக்கும்:
- கணக்கிண் உரிமையாளர் இல்லை / பதவி விலகினால், அந்த கணக்கு தவறாக பயன்படுத்துவதன் மூலம் உயர்ந்த ஆபத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில் கணக்கின் வழக்கத்திற்கு மாறான பயன்பாட்டை இல்லாத கணக்கின் உரிமையாளரால் கண்டறிய இயலாது.
- அனாதை கணக்குகள் அவற்றின் உரிமையாளர் வெளியேறும்போது நம்பகமான முறையில் செயலிழக்க முடியாது. ஏனெனில் அந்த உரிமையாளருக்கு இந்த கணக்குடன் இணைப்பு இருக்காது.