சான்றுறுதி (Authentication)

அடையாளத்தை உறுதி செய்வது

சான்றுறுதி என்பது பயனரின் விவரங்களைச் சரிபார்த்து பயனரை அடையாளம் கண்டு ஒரு இணைய வளத்திற்கு அணுகலை வழங்கும் செயல்முறையாகும்

ஒரு அடையாளத்தால் கோரப்படும் ஒரு பண்பு / தரவுத் துண்டின் உண்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் சரிபார்ப்பு செய்யப்படுகிறது

எ.கா., பயனர் பெயர் & கடவுச்சொல், உயிரளவைத் தரவு, அரசு வழங்கிய அடையாள அட்டை

பயனர்கள் நம்பிக்கைச்சான்றுகளை சரிபார்க்கிறது

அங்கீகாரம் / அதிகாரம் வழங்கும் முன் நிகழும்

அதிகாரம் வழங்கல் (Authorization)

அடையாளத்திற்கு உரிமை நல்குதல்

அங்கீகாரம் / அதிகாரம் வழங்கல் என்பது சான்றுறுதி அளிக்கப்பட்ட பயனரின் சிறப்புரிமைகள் அல்லது அமைப்பின் வளங்களை அணுகுவதற்கான அனுமதிகளை சரிபார்க்கும் செயல்முறையாகும்

அடையாள வழங்குநர் போன்ற அதிகாரப்பூர்வமான அமைப்பில் பயனருக்கு வழங்கப்பட்டஅதிகாரம் / சிறப்புரிமைகளை சரிபார்ப்பதன் மூலம் செய்யப்படுகிறது

குறிப்பிட்ட வளங்களுக்கான பயனர்களின் அதிகாரம் / அனுமதிகளை சரிபார்க்கிறது

சான்றுறுதி முடிந்த பிறகு நிகழும்