மறக்கும் களப்பெயர் முறைமை / Oblivious DNS (ODoH)
மறக்கும் களப்பெயர் முறைமை என்பது IETF-ஆல் உருவாக்கப்பட்டு வரும் ஒரு வளர்ந்து வரும் நெறிமுறை ஆகும். இது பொதுத் திறவி மறைப்பியல், பிணைய பதிலி, இலக்கு தீர்வி ஆகியவற்றை களப்பெயர் முறைமை வினவல் தீர்வு முறையில் சேர்க்கிறது. இது பயனர்களுக்கும் சுழல்நிலை தீர்விகளுக்கு இடையில் ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. ஒரு பயனர் அவரவர் விருப்பப்படி ஒரு பதிலி மற்றும் இலக்கை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு கூறுகள் சேர்க்கப்படுவதால், எப்போதும் பயனர் மட்டுமே களப்பெயர் முறைமை வினவல் தீர்வு மற்றும் அவர் சொந்த இ.நெறி முகவரி இரண்டையும் காண முடியும் என்று உத்தரவாதம் அளிக்கிறது. இந்த நெறிமுறையின் நோக்கம் இறுதி பயனர் தனியுரிமையைப் பாதுகாப்பது, இணைய சேவை வழங்குநர்கள் அல்லது களப்பெயர் முறைமை வினவல் தீர்ப்பாளர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களால் கோரப்பட்ட / பார்வையிடப்பட்ட வலைத்தளத்தைப் காண முடியும் என்பதைத் தடுப்பது.