DNS 64 & NAT 64

DNS64 என்பது ஒரு களப்பெயர் வழங்கனிடம் ஒரு குறிப்பிட்ட களத்தின் AAAA ஏட்டைக் கோரும்போது, அங்கே A ஏடு மட்டுமே இருந்தால், A ஏடு தரவை AAAA ஏடு தரவாக இணைப்பாக்கும். (Synthesizes the AAAA records from the A records).

இணைப்பாக்கம் செய்யப்பட்ட முகவரியில் முதல் பகுதி ஒரு இ.நெறி ப6/இ.நெறி ப4 பெயர்ப்பியை குறிக்கும். அதன் இரண்டாம் பகுதி இ.நெறி ப4 முகவரியை உட்பொதிக்கும். இந்த பெயர்ப்பி பொதுவாக NAT64 வழங்கன் என்று அழைக்கப்படும்.