களப்பெயர் முறைமை ஏடுகள் / DNS Records

  • A ஏடு – இணைய நெறிமுறை பதிப்பு 4 (IPv4) முகவரி சேமிக்குமிடம்
  • AAAA ஏடு - இணைய நெறிமுறை பதிப்பு 6 (IPv6) முகவரி சேமிக்குமிடம்
  • CNAME ஏடு – மாற்று களப்பெயர் சேமிக்குமிடம், இந்த ஏடு இருந்தால் இ.நெறி முகவரி கொடுக்கப்படாது.
  • MX ஏடு – இந்த களப்பெயர் நோக்கி வரும் மின்னஞ்சல்களை அதன் மின்னஞ்சல் சேவையகத்திற்க்கு மடை மாற்றும்
  • TXT ஏடு – கள நிர்வாகி சில எழுத்துக் குறிப்புகளை சேமிக்குமிடம்
  • NS ஏடு – களத்தின் அதிகார்பபூர்வ களப்பெயர் வழங்கன் முகவரியை சேமிக்குமிடம்
  • SOA ஏடு – கல நிர்வாகி குறித்த தகவல்களை சேமிக்குமிடம்.
  • SRV ஏடு – குறிப்பிட்ட சேவைகளுக்கான துறை எண்ணை குறிக்குமிடம்
  • PTR ஏடு – எதிர்திசை வினவலின் பொது, களப் பெயரை பதிலாக கொடுக்கும். இந்த ஏட்டில் இ.நெறி முகவரி தலைகீழாக சேமிக்கப்படும்

களப்பெயர் முறைமை பாதுகாப்பிற்கான பிரத்யேக ஏடுகள் (DNSSEC Specific Records)

  • RRSIG ஏடு – ஏட்டுத் தொகுப்பின் இலக்கமுறை குறியொப்பத்தை சேமிக்குமிடம்
  • DNSKEY ஏடு – மறையாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொதுத் திறவியை சேமிக்குமிடம்.
  • DS ஏடு – DNSKEY ஏட்டின் குறுக்க மதிப்பை சேமிக்குமிடம்
  • NSEC and NSEC3 ஏடு – குறிப்பிட்ட களப்பெயர் முறைமை ஏடு இல்லை என வெளிப்படையாக தெரிவிக்கும் ஏடு
  • CDNSKEY and CDS ஏடு – ஒரு குழந்தை மண்டலம் தன் பெற்றோர் மண்டலத்தில் உள்ள DS ஏட்டைப் புதுப்பிக்க பயன்படுகிறது.