பாதுகாப்பான மீவுரை பரிமாற்ற நெறிமுறை மேல் களப்பெயர் முறைமை / DNS over HTTPS (DOH)

பாதுகாப்பான மீவுரை பரிமாற்ற நெறிமுறை மேல் களப்பெயர் முறைமை வினவல் என்பது ஒரு பாதுகாப்பு நெறிமுறை. இது களப்பெயர் முறைமை வினவல்களை மறையாக்கம் செய்து பாதுகாப்பான மீவுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) மேல் அந்த வினவல் தரவுகளை கிளையனிலிருந்து சுழல்நிலை தீர்விகளுக்கு பாதுகாப்பாக அனுப்பும். இதன் நோக்கம் தகவல் பரிமாற்றத்தின் பொது இடை வருவோர் அந்த தகவலை ஒட்டுக்கேட்பதை தடுத்தல் மற்றும் தகவலை மாற்ற / சிதைக்க முடியாதவாறு பாதுகாத்தல்.