உதாரணமாக முகிலன் ஒரு இரகசிய தகவலை எழிலனுக்கு அனுப்ப விழைகிறார் என எடுத்துக் கொள்வோம். இந்த தகவல் இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிய வேண்டிய ஒன்று
தகவலை பரிமாறும் முன்னர், முகிலன் மற்றும் எழிலன் ஒரு இரகசிய சொற்றொடரை தேர்வு செய்வர். இந்த சொற்றொடர் வேறு யாருக்கும் தெரியாது /தெரியவும் கூடாது. இந்த சொற்றொடரை இரகசியத் திறவி என வைத்துக் கொள்வோம்
முகிலன் அந்த இரகசியத் திறவியை கொண்டு தன் தகவலை மறையாக்கம் செய்து, மறைக்குறியீட்டை எழிலனுக்கு அனுப்புவார் எழிலன் அதே இரகசியத் திறவியை கொண்டு மறைக்குறியீட்டை மறைநீக்கம் செய்து இயற்தகவலை பெறுவார்
இவ்வாறு ஒரே திறவியை கொண்டு மறையாக்கம் மற்றும் மறைநீக்கம் செய்யும் முறை ஒற்றைத் திறவி மறையாக்கம் என்றும் இரகசியத் திறவி மறைப்பியல் (Secret Key Cryptography) என்றும் அழைக்கப்படுகிறது.