பொதுத் திறவி மறைப்பியல் - இரகசியத்தன்மை

பொதுத் திறவி மறைப்பியல் - இரகசியத்தன்மை

உதாரணமாக முகிலன் ஒரு தகவலை எழிலனுக்கு அனுப்ப விழைகிறார் என எடுத்துக் கொள்வோம். இந்த தகவல் இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிய வேண்டிய ஒன்று. முகிலன் எழிலனின் பொதுத் திறவியை கொண்டு அந்த தகவலை மறையாக்கம் செய்து மறைக்குறியீட்டை எழிலனுக்கு அனுப்புவார். எழிலனின் தனித் திறவியை தவிர வேறு எந்த திறவியாலும் மறைக்குறியீட்டை மறைநீக்கம் செய்ய இயலாது என்பதால் எழிலனால் மட்டுமே அந்த தகவலை மறைநீக்கம் செய்ய முடியும்

இதனால் தகவலின் இரகசியத்தன்மை பண்பு காக்கப்படுகிறது.

பொதுத் திறவி மறைப்பியல் - நம்பகத்தன்மை

பொதுத் திறவி மறைப்பியல் - நம்பகத்தன்மை

உதாரணமாக முகிலன் எழிலனுக்கு அதிகாரபூர்வமாக ஒரு தகவலை அனுப்ப விழைகிறார் என எடுத்துக் கொள்வோம். முகிலன் தனது தகவலை தன் தனித் திறவி கொண்டு மறையாக்கம் செய்து எழிலனுக்கு அனுப்புவார். அவர் தனித் திறவியால் மறையாக்கம் செய்த தகவலை பின்னர் தான் அனுப்பவில்லை என மறுக்க இயலாது. இது அந்த தகவலின் மீது கையொப்பம் இடுவதற்குச் சமம். உதாரணமாக முகிலன் எழிலனுக்கு அதிகாரபூர்வமாக ஒரு தகவலை அனுப்ப விழைகிறார் என எடுத்துக் கொள்வோம். முகிலன் தனது தகவலை தன் தனித் திறவி கொண்டு மறையாக்கம் செய்து எழிலனுக்கு அனுப்புவார்.

அவர் தனித் திறவியால் மறையாக்கம் செய்த தகவலை பின்னர் தான் அனுப்பவில்லை என மறுக்க இயலாது. இது அந்த தகவலின் மீது கையொப்பம் இடுவதற்குச் சமம்.

பொதுத் திறவி மறைப்பியல் – இரகசியத்தன்மை & நம்பகத்தன்மை

பொதுத் திறவி மறைப்பியல் - இரகசியத்தன்மை & நம்பகத்தன்மை

உதாரணமாக முகிலன் எழிலனுக்கு அதிகாரபூர்வமாக ஒரு தகவலை அனுப்ப விழைகிறார் என எடுத்துக் கொள்வோம். இந்த தகவல் இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிய வேண்டிய ஒன்று. முகிலன் தனது தகவலை தன் தனித் திறவி கொண்டு மறையாக்கம் செய்து அதனை மீண்டும் எழிலனின் பொதுத் திறவியை கொண்டு அந்த தகவலை இரட்டை மறையாக்கம் (Double encryption) செய்து இரட்டை மறைக்குறியீட்டை (Double Encrypted Ciphertext) எழிலனுக்கு அனுப்புவார். எழிலனின் தனித் திறவியை கொண்டு மறைக்குறியீடு #1-ஐ மீட்டெடுத்த பின்னர் முகிலனின் பொதுத் திறவியை கொண்டு மறைநீக்கம் செய்து இயற்தகவலை பெறுவார். முகிலனின் தனித் திறவி கொண்டு மறையாக்கம் செய்வதால் நம்பகத்தன்மையும் எழிலனின் பொதுத் திறவியை கொண்டு மறையாக்கம் செய்வதால் இரகசியத்தன்மையும் பேணப்படுகிறது.