குறுக்கம் அல்லது குறுக்க செயல்கூறு (Hash Function) என்பது எந்த ஒரு தரவையும் ஒரு குறிப்பிட்ட நீளம் கொண்ட பதினாறெண்முறை எண்ணாக (Hexadecimal number) மாற்றும் கணித வழிமுறை. இதனை பயன்படுத்த திறவிகள் தேவையில்லை. உள்ளீட்டுத் தரவு எவ்வளவு நீளமாக, பெரிதாக அல்லது வெவ்வேறு வகைகளாக இருந்தாலும், ஒரு தீர்வுநெறி குறிப்பிட்ட நீளம் கொண்ட குறுக்க மதிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தும்

குறுக்கம்
குறுக்கம்

இந்த குறிப்பிட்ட நீளம் கொண்ட எண் வரிசைக்கு குறுக்க மதிப்பு (Hash Value) அல்லது செய்திச் சுருக்கம் (Message Digest) என்று பெயர். ஒரு சிறிய இடைவெளி வேறுபாடு கூட குறுக்க மதிப்பை மாற்றிவிடும். இதனால், குறுக்க மதிப்பு அதன் தரவின் கைரேகையை போன்று கருதப்படுகிறது. குறுக்க மதிப்பை மறைநீக்கி அதனை உருவாக்கிய இயற்தகவலை திரும்ப பெற இயலாது. இதனால், இம்முறை ஒரு வழி மறையாக்கம் (One Way Encryption) என்றும் அழைக்கப்படுகிறது