இரகசியத் திறவி மறைப்பியல்

  • ஒற்றைத் திறவி மறைப்பியல் இரகசியத் திறவி மறைப்பியல் என்றும் அறியப்படுகிறது
  • மறையாக்கம் மற்றும் மறைநீக்கம் செய்ய ஒரே திறவி பயன்படுத்தப்படும்மறையாக்கம் மற்றும் மறைநீக்கம் செய்ய ஒரே திறவி பயன்படுத்தப்படும்
  • இரகசியத்தன்மை பண்பை மட்டுமே அளிக்கிறது
  • பொதுவாக மறையாக்கம் / மறைநீக்கம் வேகமாக நிகழும்
  • திறவி மேலாண்மை சற்றே கடினமானது
  • இரகசியத் திறவி வெளியில் கசிந்தால் அதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் மறைநீக்கம் செய்ய இயலும். இதனால் இரகசியத் திறவியை அனைத்து பயன்பாட்டாளர்களும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

பொதுத் திறவி மறைப்பியல்

  • இரட்டைத் திறவி மறைப்பியல் பொதுத் திறவி மறைப்பியல் என்றும் அறியப்படுகிறது
  • மறையாக்கம் செய்ய ஒரு திறவி மற்றும் மறைநீக்கம் செய்ய மற்றொரு திறவி என இரண்டு திறவிகள் பயன்படுத்தப்படும்
  • இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பண்பை அளிக்கிறது
  • மறையாக்கம் / மறைநீக்கம் சற்றே மெதுவாக நிகழும்
  • திறவி மேலாண்மை மிக சிக்கலானது
  • ஒரு திறவியால் மறையாக்கம் செய்த மறைக்குறியீட்டை அதன் துணைத் திறவியால் மட்டுமே மறைநீக்கம் செய்ய இயலும்.
  • தனித் திறவி வெளியில் கசிந்தால் மட்டுமே அதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் மறைநீக்கம் செய்ய இயலும். தனித்திறவியின் உரிமையாளர் மட்டுமே அதனை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்